என்னை அறிந்தால் திரைப்படத்தில் மழலை மாறா தல அஜித்தின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனிகா. தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு மகளாக நடிக்க அனிகாவே ஒப்பந்தமாகி இருக்கிறார். குழந்தை நட்சத்திர வாய்ப்புகள் ஒரு புறம் இருந்தாலும், டீனேஜை தொட்டு விட்ட அனிகா நாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் வித விதமாக உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதன் வரிசையில் கேரளா மக்களின் பாரம்பரிய உடையான ஓணம் புடவையில் ஒய்யாரமாக அமர்ந்தபடி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட, 'என்ன அழகுடா, விரைவில் நாயகியானாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை' என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
Social Plugin