Ad Code

Responsive Advertisement

'தமன்னா-காஜல்' மட்டும் 82,00,000 ரூபாய்...! ஈஷாவின் நலத்திட்டத்துக்கு குவியும் நன்கொடை


ஈஷா ஆஸ்ரமத்தின் சத்குரு சார்பில் நதிகளை ஒன்றிணைக்கும் 'ராலி பார் ரிவர்ஸ்' இயக்கம், தற்பொழுது காவிரி ஆற்றின் கரையில் 25 கோடி மரங்களை நடும் பணியை துவங்கி இருக்கிறது.

இந்த செயல் மூலம் காவிரி ஆற்றின் கரையையும் அதே சமயம், அந்த மரங்களின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்க முடியும் என்கிற சத்குருவின் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிளம்பியுள்ளது.

கங்கனா ரவுணட், காஜல் அகர்வால், தமன்னா ஆகியோரும் இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். அதிலும், காஜல் மற்றும் தமன்னா ஆகியோர் தலா ஒரு லட்சம் மரங்களை நடும் பொறுப்பை ஏற்று இருக்கின்றனர்.

மரத்திற்கு 42 ரூபாய் வீதம் 1 லட்சம் மரங்களுக்கு 42 லட்ச ரூபாய் வீதம், மொத்தம் 84 லட்ச ரூபாய் நிதியை திரட்ட வீடியோவையும் வெளியிட்டு இருக்கும் இவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் நிதி உதவியும் செய்ய துவங்கியுள்ளனர்.