Ad Code

Responsive Advertisement

'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..? தளபதியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்


நடிகர்கள் விஜய், தனுஷ் மற்றும் இயக்குனர் சங்கர் உலகின் மிகவும் பெருமை வாய்ந்த சொகுசு காரான ரோல்ஸ் ராய்சை தங்கள் வசமாக்கிய பிரபலங்கள் என்ற பெருமையை உடையவர்கள்.

கோடிகளில் துவங்கும் இந்த வெளிநாட்டு கார்களின் விலைக்கு நிகராக, அவற்றிற்கு நுழைவு வரியும் இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இவர்களின் கார்களுக்கு நுழைவு வரியாக மட்டும், ஒவ்வொருவரும் தலா 44 லட்சங்கள் வரை அரசுக்கு செலுத்த வேண்டி இருக்கும் நிலையில்,

 இந்த தொகையை நீக்க கோரி அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வழக்கு தொடர்ந்தனர். அதனை தொடர்ந்து, விதிக்கப்பட்ட நுழைவு வரியில் 15 சதவீதத்தை மட்டும் கட்டுமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டது.

என்றாலும் இதனை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடும் செய்து அதற்கான வழக்கு விசாரணை தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது குறித்த செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், 'படத்திற்கு 60 கோடி வாங்கும் விஜய் போன்ற நடிகர்களுக்கு வரி செலுத்துவதில் என்ன சிரமம்?' என பலரும் விமர்சித்து வருகின்றனர்.