Tuesday, 3 September 2019

எங்கே போகுது நாடு??? '6 வயது' சிறுமியை சீரழித்த 1ம் வகுப்பு மாணவன்


ஹரியானா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவியை கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொழிநுட்பம், வாழ்க்கைத்தரம் என நம் நாடு வளர்ந்து வரும் நிலையில், கூடவே பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளும் அதிகரித்து வருகிறது.

பெரியவர் சிறியவர் என பாகுபாடு இல்லாமல் நிகழ்த்தப்படும் இத்தகைய குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு சிக்கி இருக்கிறார் ஹரியானவை சேர்ந்த 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்.

குறிப்பிட்ட மாணவர் உடன் பயிலும் சிறுமி, உடல் நல குறைவு காரணமாக அண்மையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுமி கற்பழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த தகவல் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்படவே, மாணவியிடம் நடந்ததை விசாரித்த போலீசார், சிறுமி அளித்த தகவலின் படி  அவருடன் பள்ளியில் பயிலும் 1ம் வகுப்பு மாணவனை அடையாளம் கண்டு போஸ்கொ(POSCO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

 




Disqus Comments
'