Ad Code

Responsive Advertisement

மாதம் '4000' கருக்கலைப்புகள்..! தடம் மாறும் பள்ளி, கல்லூரி மாணவிகள்...! பெற்றோர்களே உஷார்


மும்பையில் மட்டும் ஒரே மாதத்தில் சுமார் 4000 மாணவிகள் கருக்கலைப்பு செய்து கொள்ளும் அவல நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த தனியார் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் பிரபல தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி இருந்தது. பாலியல் தொடர்பான கேள்விகள் அடங்கிய இந்த கருத்துக்கணிப்பின் மூலம் வெளிவந்த தகவல்கள் பெண் பிள்ளைகளை கொண்ட பெற்றோர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

16 முதல் 22 வயதை கொண்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் கூறிய பதில்களின் அடிப்படையில், இவர்களுள் 24 சதவிகிதம் பேர் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பதும். 10 சதவிகிதம் பேர் இந்த வயதிலேயே உறவில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அது மட்டுமல்லாது, மும்பையில் மட்டும் சுமார் 4000 பள்ளி கல்லூரி மாணவிகள் இப்படி பட்ட தகாத உறவினால் கருக்கலைப்பு செய்து கொண்ட பேரதிர்ச்சியான தகவலும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.