'திரைத்துறை நாயகிகள் என்றாலே தவறானவர்கள்' என்ற எண்ணம் சில ரசிகர்களிடையே இன்னமும் இருந்து வருகிறது. இதன் காரணமாக எடக்கு மடக்காக கேள்வி கேட்டு மூக்குடைபட்டு வரும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்தேறி வருகிறது.
இந்நிலையில் பிரபல மாடல் அழகியும், குணச்சித்திர நடிகையுமான 'சோபியா ஹயாத்' இதே போன்ற ஒரு சம்பவத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ரசிகர் ஒருவர் ஒரு இரவுக்கு 20 லட்சம் தருவதாக குறுந்தகவல் ஒன்றை அனுப்ப, அதற்கு பதிலளித்த நடிகை, '20 கோடியே கொடுத்தாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது. வேண்டுமானால் உன் தாயிடம் போய் கேள்' என பதிலளிக்க, எதுவுமே திரும்ப கூறாமல் தெறித்து ஓடி இருக்கிறார் அந்த ரசிகர்.
Social Plugin