மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 17 வயதான ஹாசினி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற சிறுமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாயமானார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட சிறுமி அதே பகுதியை சேர்ந்த, 19 வயதான அங்கிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்கிற பெண்ணோடு விடுதியில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் விசாரித்த போலீசார், ஹாசினியும், அங்கீதாவும் காதலித்து வருவதை கண்டறிந்தனர்.
ஓரின சேர்க்கை தவறில்லை என்கிற சட்டம் சென்ற ஆண்டு அமல்படுத்தப்பட்டதால் இருவரும் காதலித்து ஓடிவந்தது குற்றமில்லை என்றாலும், ஹாசினி 17 வயதாகும் மைனர் பெண் என்கிற காரணத்தினால், அங்கிதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Social Plugin