Ad Code

Responsive Advertisement

''6 மாத குழந்தை'' உட்பட 5 பேர் கொடூர கொலை..! 14 வயது சிறுவனின் வெறியாட்டம்


அமெரிக்காவில் 14 வயது சிறுவன், 6 மாத குழந்தை உட்பட 5 பேரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்புகுதி மக்களை கொலைநடுங்க வைத்திருக்கிறது.

என்னதான் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக மக்கள் போராடி வந்தாலும், பள்ளி குழந்தைகள் அப்பாவி பொதுமக்கள் என துப்பாக்கிகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து அமெரிக்க அரசும் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவின் அலபாமா பகுதியில் நிகழ்ந்தேறி இருக்கிறது இந்த கொடூரம். சம்பவத்தன்று தொடர் கைத்துப்பாக்கி சத்தங்களை கேட்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதனை அடுத்து விரைந்து வந்த போலீசார், தனது தந்தை, தந்தையின் இரண்டாவது மனையி, இரண்டாவது மனைவியின் 6 மாத கைக்குழந்தை, மகன் மற்றும் மகள் என 5 பேரை, ஈவு இரக்கம் இன்றி சுட்டு கொலை செய்த 14 வயது சிறுவனை கைது செய்தனர்.  

 தொடர்ந்து சிறுவனை போலீசார் விசாரித்து வரும் நிலையில், கொலைக்கான காரணம் என்ன என்பது விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.