தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
என்றாலும் அந்த சமயத்தில் விஸ்வாசம் திரைப்படம் தமிழக அளவில் மட்டும் 125கோடி வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தது அதன் தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில் அந்த தகவல் குறித்து பேசிய விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள், எங்களுக்கு தெரிந்து அந்த திரைப்படம் அதிகபட்சமாக 100 கோடி ரூபாயை தான் வசூல் செய்தது.
ஆனால் அதே சமயம் வெளியான பேட்ட திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துவிட்டது என்ற கோபத்தில், போட்டி மனப்பான்மையில், 'விஸ்வாசம் 125 கோடி வசூல்' என அறிவித்துவிட்டனர்' என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
Social Plugin