ராய்பூரில் அமைந்துள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்திஷ்கரின் காம்தாரி பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி அப்பள்ளியில் பயின்று வரும் 1ம் வகுப்பு மாணவி, மூன்று மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை முறையிட்டு மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். என்றாலும் அப்பள்ளியின் சார்பில் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அம்மாணவியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து, காம்தாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தபுகாரை கையில் எடுத்த போலீசார், குறிப்பிட்ட மூன்று மாணவர்கள் மீதும் POSCO, பிரிவு 376, பிரிவு 354A ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து முறைப்படி புகார் அளிக்காத அப்பள்ளியின் தலைமையாசிரியர் BS அகைர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Social Plugin