Ad Code

Responsive Advertisement

விஜய்-அஜித் இவர பாத்து கத்துக்கணும்..! சமூக ஆர்வலர்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி


விஜய் அஜித் செய்ய தவறியதை நடிகர் விஜய் சேதுபதி செய்திருப்பதாக சமூக ஆர்வலர்களை கொண்டாட வைத்திருக்கிறது நடிகர் விஜய் சேதுபதியின் சமீபத்திய நடவடிக்கை.

 டெல்லி பிரசாத் தீண தயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் 'துக்ளக் தர்பார்'.  இத்திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையிலுள்ள வடபழனியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள விஜய் சேதுபதி அங்குவந்திருந்த நிலையில், அவரது ரசிகர்கள் சாலையில் பட்டாசு வெடித்து பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் மிக்க பிரதான அப்பகுதி மேலும் ஸ்தம்பித்தது.

இது குறித்து அவ்விழாவில் பேசிய விஜய் சேதுபதி, நான் இவ்விழாவிற்கு வரும் பொழுது வாகனங்களை நிறுத்தி ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்குமாறு இருந்த ரசிகர்களின் இந்த செயல் எனக்கு வருத்தத்தை அளித்தது.

பட்டாசு வெடித்து காசை காரியாக்குவதுடன் சுற்று சூழலையும் மாசு படுத்துகிறீர்கள். பட்டாசு வெடிக்க சொன்னவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்' என ஆவேசமாக குறிப்பிட்டு இருந்தார்.

இவரது இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் விஜய் சேதுபதி போல, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் எல்லை மீறும் ரசிகர்களை விஜய்-அஜித்தும் கண்டித்தால் நன்றாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.