சமூக வலைதள உபயோகம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், திரைத்துறை பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் நெருங்கி பழகும் ஒரு இடமாகவும் இவை விளங்கி வருகிறது.
லைவ் சாட் உரையாடல், கேள்வி பதில் செசன் என ரசிகர்களுடன் பிரபலங்கள் நெருக்கம் காட்டி வரும் நிலையில், குறும்புக்கார ரசிகர்களின் ஏடாகூட கேள்விகளையும் பிரபலங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
இப்படி பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கிவரும் டைகர் ஸ்ரோஃப் அவர்களை ரசிகர் ஒருவர் விபரீத கேள்வியால் திக்குமுக்காட செய்த சம்பவமும் நிகழ்ந்தேறியுள்ளது.
தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வழக்கம் போல ரசிகர்களுடன் அவர் உரையாடி இருந்த நிலையில், 'நீங்கள் வெர்ஜினா? அதாவது கன்னித்தன்மை உடன் இருக்கிறீர்களா?' என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்க திணறிய டைகர், 'என் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை எனது பெற்றோரும் பின் தொடர்கிறார்கள்' என மழுப்பல் பதில் அளித்து விட்டு நைசாக நழுவி சென்று விட்டார்.
Social Plugin