ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வரும் நடிகை டாப்ஸி. அறிமுகமானது என்னமோ தென்னிந்திய சினிமாவில் என்றாலும் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்த பின்னர், தென்னிந்திய திரைப்படங்களை பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்ததால், தென்னிந்திய திரைப்படங்களை தவிர்த்து வந்த அவர் மீண்டும், நேரடி தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க 'ஸ்பை த்ரில்லர்' வகை திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் தான் டாப்சி நாயகியாக நடிக்க இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், 'தென்னிந்திய மொழி படங்களை பற்றி எகத்தாளமாக பேசி விட்டு மீண்டும் நடிக்க வந்திருப்பது ஏன்?' என்கிற பாணியில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Social Plugin