சமீபத்திய வழக்கு ஒன்றில், திருமணத்திற்கு முன்பு விருப்பப்பட்டு வைத்து கொள்ளும் உறவை காரணம் காட்டி, ஆண்களின் மேல் இனி பாலியல் வழக்குகள் தொடர முடியாது என்கிற முறையில் தீர்ப்பளித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்ததாக பெண்கள் வழக்கு தொடர்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வணிகத்துறை உதவி ஆணையராக பணி புரிந்து வரும் பெண் ஒருவர்,
தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஆறுவருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு, தனது காதலர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவர் பாலியல் புகார் ஒன்றினை அளித்திருந்தார்.
இந்த வழக்கு சந்திர சூட், இந்திரா பானர்ஜி அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்கு தீர்ப்பளித்த நீதிபதிகள் 'திருமண நிச்சயத்திற்கு முன்பு விருப்பப்பட்டு வைத்து கொள்ளும் உறவை பலாத்காரமாக எடுத்துக்கொள்ள முடியாது' எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Social Plugin