விஜய் முதல், விஜய் தேவரகொண்டா வரை தங்கள் பட பிரமோஷனுக்கு சர்ச்சைகள் பெரும் அளவில் விளம்பரம் தேடி தந்து இருக்கிறது.
சமீபத்தில் கூட ஜெயம் ரவியின் கோமாளி பட ட்ரைலரில் நடிகர் ரஜினியை கலாய்த்து உருவான சர்ச்சை அத்திரைப்படத்தை பெரும் அளவில் விளம்பரப்படுத்திவிட்டது.
இதேபாணியில் துவண்டு போய் கிடக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த முயன்ற காஜல் அகர்வாலுக்கு இந்த மெத்தட் கைகொடுக்க வில்லை. அதாவது சர்ச்சைக்கு உள்ளான அதே கோமாளி படத்தில் நாயகியாக நடிக்கும் காஜல், தன்னை பற்றி திரையுலகம் பரபரப்பாக பேச அம்மன் வேடத்தில் கொஞ்சம் கவர்ச்சி கலந்து போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இது பெரிய அளவில் சர்ச்சையாக வெடிக்கும் என அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், எவருமே கண்டுகொள்ளாத நிலையில் புஷ்வாணமாகிவிட 'இதுவும் நமக்கு கைகொடுக்க வில்லையே' என புலம்பி வருகிறாராம்.
Social Plugin