Ad Code

Responsive Advertisement

கழட்டி விட்ட டிவி நாயகன்..! நேரம் பார்த்து பழிவாங்கிய வாரிசு நடிகை..!


டிவி நாயகனை வாரிசு நடிகை நேரம் பார்த்து பழிவாங்கிய சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் வெகுவாக பேசப்பட்டு வருகிறது.

முன்னணி நடிகர் அந்தஸ்தை சர்வ சாதாரணமாக எட்டி பிடித்த நாயகன், தன் மார்க்கெட் வேகத்திற்கு நடித்தால் நயன்தாரா தான் என ஹை பட்ஜெட் நடிகைகள் பக்கம் திரும்பி விட்டார்.

இதனால் தன்னுடன் முந்தைய படங்களில் நடித்த வாரிசு நடிகை, அடுத்த படங்களிலும் சிபாரிசு செய்ய கோரியும் நைசாக கழட்டி விட்ட இவர், தனது தொடர் தோல்வி படங்களால் மீண்டும் அந்த நடிகையுடன் நடிக்க தூது விட்டார்.

இதுதான் சமயம் என சுதாரித்து கொண்ட வாரிசு நடிகையோ, 'நயன்தாரா அளவுக்கு சம்பளம் கொடுத்தால் தான் உங்களுடன் நடிப்பேன்' என கிடுக்கிப்பிடி போட செய்வதறியாது திகைத்து நிற்கிறாராம் நாயகன்.