நடிகர் தனுஷின் பாடல்கள் உலக அளவில் ட்ரெண்ட் ஆவது வழக்கமாகி வருகிறது. முன்னதாக வொய் திஸ் கொலவெறி, ரௌடி பேபி ஆகிய பாடல்கள் உலக புகழ் பெற்று பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான மற்றொரு மாரி திரைப்பட பாடல் ஒன்றும் பிரபல அமெரிக்க டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒலித்து தமிழ் சினிமா ரசிகர்களை குதூகலிக்க வைத்து இருக்கிறது.
'அமெரிக்கா காட் டேலண்ட்' எனும் உலக பிரசித்தி பெற்ற டிவி நிகழ்ச்சியில், வட இந்தியாவை சேர்ந்த நடன குழு ஒன்று பங்கு கொண்டுள்ளது. இவர்களது ஆபத்து நிறைந்த ஸ்டண்ட் நடனத்தால் முதற் சுற்றிலேயே அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது இந்த நடனக்குழு.
இந்நிலையில் அரையிறுதி போட்டியில் இவர்கள் எவருமே எதிர்பாராத விதத்தில், மாரி திரைப்பட பாடலுக்கு நடனமாடி நடுவர்கள் மற்றும் அமெரிக்க மக்களின் கவனத்தையும் ஈர்த்தனர்.
Social Plugin