கிரிக்கெட் முதல் உலக அரசியல் வரை துல்லியமாக கணித்து இணையதளங்களில் வைரலாகி இருப்பவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இவர் நயன்தாராவின் திருமணம் குறித்து கணித்து இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பாலாஜி, 'நீண்ட காலமாக சினிமா துறையில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நடிகை நயன்தாராவின் திருமணம் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும்.
எனக்கு கிடைத்திருக்கும் அவரது ஜாதகம் உண்மை எனும் பட்சத்தில் 100% இது உறுதி என அடித்து கூறி இருக்கிறார். முன்னதாக ஆர்யா மற்றும் விஷால் திருமணம் குறித்தும் இந்த ஆண்டின் துவக்கத்தில் பாலாஜி துல்லியமாக கணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Social Plugin