Monday, 15 July 2019

வெளியேறும் போதும் வனிதா கொடுத்த ஷாக்..! மிரண்டு போன ரசிகர்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் வலுவான போட்டியாளராக பார்க்கப்பட்ட வனிதா நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். அப்படி வெளியேறும் சமயத்திலும் அவரது பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

காதை கிழிக்கும் கனத்த குரலால் தன்னுடன் வாதிடுபவர்களை தெறித்து ஓட வைத்தவர் வனிதா. தன்னுடன் பேசுபவர் புண்படுகிறாரா என்பது கூட தெரியாமல் கத்திவிடும் அவரது பழக்கத்தால், மக்களிடையே அவர் மீது வெறுப்பு உண்டானது.

பல சமயங்களில் அவர் நல்லதுக்காகவே பேசி இருந்தாலும், அவரது பேசும் முறை முகம் சுளிக்க வைத்தது. இதன் காரணமாக போதிய வாக்குகள் இல்லாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்படி வெளியேறும் தருணத்தில் கூட 'தான் எந்த தவறும் செய்யவில்லை என்னை ஏன் மக்கள் வெளியேற்றினார்கள்' என்ற எண்ணத்திலேயே அவர் இருந்தார்.

அதாவது இவ்வளவு நடந்த பிறகும், தான் செய்தது தவறு என்பதை கூட அவர் உணராமல் இருந்திருக்கிறார். தர்சனுடனான வாக்கு வாதம் குறித்து பேசிய கமல், 'தர்சன் போல பிற போட்டியாளர்கள் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்றால், 'தான் செய்தது சரி' என்ற மன நிலையிலேயே வனிதா இருந்து விட கூடும்' என பேசி இருந்தது நினைவிருக்கலாம்.

இதனை உண்மை என நிரூபிக்கும் படியே இருந்தது, வனிதா, ஷாக்சி மற்றும் செரின் அவர்களது இறுதி தருண ரியாக்சன்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();