Friday, 5 July 2019

'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'..! வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வனிதா விஜயகுமார் அவர்களின் மீது எழுந்த குழந்தை கடத்தல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் முதன் முறையாக, இதில் சம்பந்தப்பட்ட வனிதா மற்றும் ஆனந்தராஜ் தம்பதியின் மகள் தெரிவித்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு  வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வனிதா தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக ஆனந்தராஜ் அளித்த புகாரை அடுத்து தெலுங்கானா போலீஸ், அவரை விசாரணை செய்ய தமிழகம் வந்தது.

வனிதா பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் நிலையில், தெலுங்கானா போலீசை சந்தித்த அவரது வழக்கறிஞர், குழந்தையின் கருத்தை கேட்குமாறு நிர்பந்தித்தார். இதனை அடுத்து பிக்பாஸ் சார்பு வழக்கறிஞர், தெலுங்கானா போலீஸ் அந்நிகழ்ச்சி செட் அமைந்துள்ள பகுதியில் வனிதா மகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்பொழுது, வனிதாவின் மகள், 'தனக்கு தன் தந்தை இடம் பாதுகாப்பு இல்லை. அவரது நண்பர்கள் வீட்டில் குடித்து விட்டு என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள். அப்பா தினம் ஒரு பெண்ணை அழைத்து வருகிறார்.

அவர்கள் நான் உறங்கி கொண்டிருந்தாலும் எழுப்பி, என்னை படுக்கையறையில் இருந்து நள்ளிரவில் வெளியே அனுப்பி விடுகிறார்கள். வேலைக்காரியை போலவும் நடத்துகிறார்கள்.

அம்மா என்னை கடத்தி வரவில்லை, நானாகத்தான் போன் செய்து அவரை அழைத்தேன். அம்மாவுடன் செல்லும் போது, அப்பாவிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அம்மாவின் மீது எந்த தவறும் இல்லை' என தெரிவித்திருந்த நிலையில், குழந்தையின் பாதுகாப்பை அறிந்து தெலுங்கானா போலீஸ் கிளம்பி சென்றதாகவும் வழக்கறிஞர் தெரிவித்து இருக்கிறார்.   






Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();