Monday, 15 July 2019

விஜயை அடுத்து சூர்யாவை போட்டு தாக்கிய H.ராஜா..! கடும் கோபத்தில் ரசிகர்கள்

'பாஜக' கட்சியின் சர்ச்சை மிகுந்த தலைவர்களில் ஒருவரான H.ராஜா, நடிகர் சூர்யாவின் கருத்து குறித்து விமர்சித்து இருக்கிறார்.


முன்னதாக பாஜக கட்சியை விமர்சித்த காரணத்திற்காக நடிகர் விஜயை கடுமையாக சாடி வந்தார் H.ராஜா. இந்நிலையில் மத்திய அரசின் மும்மொழி கொள்கை குறித்தும், நீட் தேர்வு குறித்தும் பேசி இருந்த சூர்யாவும் அவரது கண்டன பேச்சுகளுக்கு ஆளாகி இருக்கிறார்.

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, இன்றைய தலைமுறை குழந்தைகள் மூன்று வயதில் மும்மொழி கொள்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

அரசுப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்கள் இல்லாமல் எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும் என விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு பதிலளித்த H.ராஜா 'நடிகர் சூர்யா தனது பேச்சின் மூலம் வன்முறையை தூண்ட பார்க்கிறார்' என விமர்சித்து இருந்தார்.

H.ராஜாவின் இந்த கருத்திற்கு வழக்கம் போல, ரசிகர்களிடையே கண்டனம் எழுந்துள்ளது.       
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();