தான் புரிந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய சரவணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளரான நடிகர் சரவணன் கடந்த ஞாயிறு எபிசோடின் போது, கல்லூரி காலத்தில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்திருப்பதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இவரது இந்த கருத்துக்கு கமல் உட்பட அங்கிருந்த பார்வையாளர்கள் எவரிடம் இருந்தும் எதிர்ப்பு எழவில்லை. ஆனாலும் சின்மயி, வனிதா போன்ற பல பிரபலங்கள் சரவணனின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கண்டன குரல்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்த நிலையில், நடிகர் சரவணன் அவ்வாரு பேசியமைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்குமாறு பிக்பாஸ் நிகழ்ச்சி குழு கட்டளை விதித்தது.
இதை அடுத்து கண்பெசன் அறையில் பேசிய சரவணன், 'கல்லூரி காலத்தில் தான் செய்த அந்த தவறை எவரும் செய்யக்கூடாது என கூறவந்து முடியாமல் போய்விட்டதாகவும், தனது கருத்து எவரையேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும்' குறிப்பிட்டு இருந்தார்.
Social Plugin