பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடன இயக்குனர் சாண்டி அவர்களின் மறுபக்கம் குறித்து எச்சரித்து இருக்கிறார் நடன இயக்குனர் ராபர்ட்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூன்றாவது வாரத்தை தொட்டு இருக்கிறது. சண்டை சச்சரவு என சென்று கொண்டிருந்த வீட்டில் சாண்டியின் கலகலப்பான பேச்சே ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.
இதனால் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராகவும் சாண்டி இருக்கிறார். இந்நிலையில் சாண்டி குறித்து அண்மையில் பேசிய நடன இயக்குனர் ராபர்ட், 'சாண்டி மிகவும் கலகலப்பானவர் ஆனால் அவருக்கு இன்னொரு பக்கமும் உண்டு.
இன்று வரை அவர் கோபப்படவில்லை, ஒரு வேளை அவர் கோபப்படும் படி சூழ்நிலை உருவானால் பிக்பாஸ் வீடு தாங்காது' எனக்கூறி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
Social Plugin