வரதட்சணை பிரச்சனைகளால் பல குடும்பங்களில் உயிரிழப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகள் நிகழ்ந்து வரும் நிலையில், கலாச்சாரத்தில் மேம்பட்டவர்களாக தங்களை காட்டி கொள்ளும் நடிக நடிகைகளிடமும் இந்த பழக்கம் இருப்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, தமிழ் தெலுங்கில் மிக பிரபலமான நடிகை சமந்தாவும் தான் வரதட்சணை கொடுத்தது குறித்து பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
எப்பொழுதும் கலகலப்பான நேர்காணல்களில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்கும் சமந்தா அண்மையில், மிக தீவிரமான கேள்விகள் அடங்கிய நேர்காணலில் சிக்கி கொண்டார்.
குடும்பத்தில் பில் கட்டுவது யார், சமையல் செய்வது யார் உள்ளிட்ட கேள்விகளுடன், வரதட்சணை எவ்வளவு கொடுத்தீர்கள் என்ற அதிர்ச்சிகர கேள்வியும் குறிப்பிட்ட நேர்காணலில் இடம் பெற்று இருந்தது.
இதற்கு வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை என்றாலும், என் கணவரை திருமணம் செய்து கொள்ள நிறையவே கொடுத்தேன் என தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் சமந்தா.
Social Plugin