Ad Code

Responsive Advertisement

'உம்மா' காட்சிக்காக 1.5 கோடியை உதறி எறிந்த சாய்பல்லவி..! திரைத்துறையினர் ஷாக்


ப்ரேமம் படம் மூலம் திரைத்துறையில் வெற்றிகரமான நாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இவரது நடவடிக்கைகள் பலவிதங்களில் திரைத்துறையினரை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.

தியா, NGK, மாரி-2 என அடுத்தடுத்த வித்தியாச கதை கொண்ட படங்களில் நடித்து அசத்தி இருக்கும் அவர், ஒரு முத்தக்காட்சிக்காக மாபெரும் பட வாய்ப்பை உதறி தள்ளிய சம்பவமும் நிகழ்ந்தேறியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா என அடுத்தடுத்த படங்களில் வெற்றிகர நாயகனாகி இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவரது படங்களில் நடிக்க நாயகிகள் பலர் போட்டா போட்டி இட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது 'டியர் கொம்ரேட்' எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சாய்பல்லவியின் கதவை தட்டி இருக்கிறது. கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்ளும் நடிகையான சாய்பல்லவி இதன் கதையை கேட்டு டபுள் ஓகேவும் சொல்லி இருக்கிறார்.

ஆனால் காட்சிகளை விவரிக்கும் போது அதில் இடம் பெற இருந்த முத்தக்காட்சி குறித்து கேள்விப்பட்ட அவர், 'கோடி ரூபாய் கொடுத்தாலும், கவர்ச்சி காட்டியோ, முத்தக்காட்சிகளிலோ  நடிக்க மாட்டேன்' என கூறி படத்திலிருந்து விலகவே அந்த வாய்ப்பு ராஸ்மி கண்ணாவுக்கு சென்றிருக்கிறது. 

இதே போல முன்னதாக, கோடிகளை கொட்டி கொடுக்கும் மேக்கப் உபகரணங்கள் விளம்பரத்தில் நடிக்க மறுத்தது, தோல்வியடைந்த தன் படத்திற்காக சம்பளத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கே கொடுத்தது என பல்வேறு நடவடிக்கைகளால் பெரும்பாலான நாயகிகள் போல அல்லாது தனித்து நிற்கிறார் சாய்பல்லவி.