Thursday, 4 July 2019

அடையாளமே தெரியாமல் மாறிய 'சின்ன காக்கா முட்டை' - சமீபத்திய புகைப்படம் இதோ


காக்கா முட்டை திரைப்படத்தில் சின்ன காக்கா முட்டை காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரமேஷ்.

கடந்த 2015ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விருதுகளை குவித்து மாபெரும் வெற்றி படமாகவும் விளங்கியது. இத்திரைப்படத்தின் மூலம் குப்பத்து சிறுவர்களாக ஏழ்மையில் தவித்த  விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரங்களாக உருவெடுத்தனர்.

விக்னேஷ் ஏற்கனவே அப்பா, அறம் ஆகிய படங்களில் நடித்து விட்ட நிலையில், சின்ன காக்க முட்டை என செல்லமாக அழைக்கப்படும் ரமேஸும் பிழை எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் தனது முகத்தை காட்ட இருக்கிறார்.


அத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், அந்நிகழ்ச்சியில் தோன்றிய சின்ன காக்க முட்டையின் சமீபத்திய தோற்றம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();