Monday, 15 July 2019

நடிப்பில் சிவாஜியை மிஞ்சிய மோகன் வைத்யா..! போட்டு கொடுத்த சாண்டி..!


பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் மோகன் வைத்யா அவர்களது செயல்பாடுகள் மனுஷன், நடிப்பில் பின்னுகிறார் என்றே ரசிகர்களை நினைக்க வைக்கிறது.

அதன்படியே போட்டியாளர் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தனது சுய ரூபத்தை வெளிப்படுத்தி வெறுப்பை சம்பாதித்து வருகிறார். சென்ற வார எலிமினேஷனில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வெளியேறியது நினைவிருக்கலாம்.

அப்போது கண்ணீர் விட்டு கதறி அழுதார் மோகன் வைத்யா. சொல்லப்போனால் முதல் ஆளாக அவரை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ததே அவர் தான். ஆனால் மக்களின் அனுதாபத்தை பெற போலிக் கண்ணீருடன் பாத்திமாவை வழியனுப்பி வைத்தார்.

இந்நிலையில் நேற்று வனிதா வெளியேறிய போதும், கமலின் முன்பு கண்ணீர் விட்டு கதறினார் மோகன் வைத்யா. அப்போது அருகிலிருந்த சாண்டி 'என்ன கண்ணுல தண்ணியே வரல'  என போட்டு தாக்கியது ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததுடன் அவரது உண்மை முகத்தை போட்டு கொடுக்கும் படியும் அமைந்தது.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();