பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இலங்கையை சேர்ந்த போட்டியாளர் லாஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக குண்டை தூக்கி போட்டிருக்கிறார் மர்ம நபர் ஒருவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சில வாரங்களுக்கு முன்பு துவங்கி இருந்தது. இம்முறை இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா தனது வசீகர தோற்றம் மற்றும் இலங்கை தமிழால் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
இவருக்காக ரசிகர்கள் ஆர்மியெல்லாம் துவங்கிவிட்ட நிலையில், அவரது உண்மையான முகம் குறித்து அதிர்ச்சிகர தகவலை பதிவிட்டு இருக்கிறார் பெண் ஒருவர்.
தான் லாஸ்லியா படித்த பள்ளியில் படித்ததாக சொல்லிக்கொள்ளும் அந்த பெண், 'தங்கள் பள்ளியிலேயே ஆபத்தான பெண் லாஸ்லியா தான். அவரது உண்மை முகத்தை பார்த்தல் அனைவரும் மிரண்டு போய் விடுவீர்கள்.
மேலும் அவர் திருமணமாகி விவாகரத்தானவர். இந்த நிகழ்ச்சிக்காக அந்த உண்மையை மறைக்க பார்க்கிறார்' என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
— BiggBoss Reviews (@ReviewsBiggboss) July 4, 2019
Social Plugin