Wednesday, 3 July 2019

இந்திய அணியை கிண்டல் செய்த இங்கிலாந்து வீரர்..! யுவி கொடுத்த நெத்தியடி பதில்


இந்திய அணியின் வெற்றிபெறுவது குறித்து விளையாட்டாக கலாய்த்த இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர் பீட்டர்சனுக்கு, யுவராஜ் சிங் அளித்த பதிலடி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங்க். என்றாலும் உலகக்கோப்பை போட்டிகளில் தனது ஆதரவை தொடர்ந்து இந்திய அணிக்கு அளித்து வருகிறார்.

நேற்று நடந்த பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில், ரோஹித் சர்மாவின் ஆட்டம் குறித்து புகழ்ந்து, 'தொடர் நாயகன் விருதை அவர் நெருங்கி விட்டதாக' பதிவிட்டிருந்தார் யுவராஜ் சிங்.

இந்நிலையில் அந்த பதிவில் இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து சம்பந்தமே இல்லாமல், கருத்து தெரிவித்து இருந்தார் அவ்வணியின் முன்னாள் வீரரான பீட்டர்சன்.

இதற்கு, 'நான் இங்கே வெல்வது குறித்து பேசவில்லை, நான் சொன்னது தொடர் நாயகன் விருது குறித்து. பிறகு, நீங்கள் இன்னும் அரையிறுதிக்கே தகுதி பெறவில்லை. முதலில் உள்ளே வாருங்கள் அதன் பின் வெற்றி குறித்து பேசலாம்' என நெத்தியடி பதில் அளித்திருந்தார் யுவி.






Disqus Comments
'