Ad Code

Responsive Advertisement

'50 ஆயிரம்' ரூபாய் தான் 'காஜல் அகர்வால்' வீட்டிற்கே வருவார்..! விபச்சார மோசடியில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளை வீட்டிற்கே அனுப்பி வைப்பதாக ஆசை காட்டி, பணக்கார வாலிபர்களை ஏமாற்றிய தமிழ் சினிமா தயாரிப்பளார் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார்.

ராமாநாதபுரத்தை சார்ந்த கோடீஸ்வரரின் மகன் பிரதீப். இவர் தீடிரென காணாமல் போன நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக 'வாழவே பிடிக்கவில்லை நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்' என வீட்டிற்கு போன் செய்து பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

அவர் கால் செய்த எண்ணின் இடத்தை கண்டறிந்த போலீசார், கொல்கத்தாவில் இருந்த பிரதீப்பை மீட்டு ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்ததில், 

இணையதளத்தில் குறிப்பிட்ட தொகை செலுத்தினால் தமிழ் சினிமா நடிகைகளை வீட்டிற்கே அனுப்பி வைப்பதாக வெளியாகி இருந்த விளம்பரத்தை கண்டதாகவும், அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு கால் செய்த போது பேசிய மர்ம நபர் ஒருவர், தனது புகைப்படம், அடையாள அட்டை, மற்றும் 25 ஆயிரம் முன் பணம் பெற்றதாக தெரிகிறது.

அவர் வழங்கிய நடிகைககள் பட்டியலில் இருந்து காஜல் அகர்வாலை தேர்வு செய்த பிரதீப், மேலும் 25 ஆயிரம் செலுத்தி இருக்கிறார். அவர் வழங்கிய அடையாள அட்டையை வைத்து பிரதீப்பின் பின்புலத்தை தெரிந்து கொண்ட மர்ம நபர்,

காஜல் அகர்வாலுடன் நிர்வாண கோலத்தில் இருப்பது போலபிரதீப்பின் புகைப்படத்தை மார்பிங் செய்து, அதனுடன் தாங்கள் உரையாடிய போன் கால்களையும் இணைத்து உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி சுமார் 75 லட்சம் வரை அவரிடம் இருந்து பறித்து இருக்கிறார்.

மேலும் பணம் இல்லை என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டவுடன் தான், தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எட்டி இருக்கிறார் பிரதீப். அவர் கூறிய தகவலின் படி, பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கை ஆராய்ந்த போலீசார், நார்கோட்டீஸ் எனும் திரைப்படத்தை தயாரித்து வரும் சரவண குமார் என்கிறா கோபால க்ரிஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.