Tuesday, 30 July 2019

வெளியே நெருங்கிய தோழிகள், உள்ளே பரம எதிரிகள்..! முட்டி மோதிக்கொள்ளும் முன்னணி நடிகைகள்


சினிமாத்துறை வட்டாரத்தில் தங்களை பிரிக்க முடியாத நெருங்கிய தோழிகளாக காட்டிக்கொள்ளும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் இருவர், தங்களுக்குள்ளே ஒரு பனிப்போரையே புரிந்து வருகின்றனர்.

நீ இட்லின்னா நான் சாம்பார், என நேரில் சந்தித்து கொள்ளும் சமயங்களில் கொஞ்சி குலாவி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வந்தவர்கள் இந்த நடிகைகள்.

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோடும் அளவிற்கு முன்னணியில் இருந்த வந்த இவர்களின் மார்க்கெட் தற்பொழுது டல்லடிக்க துவங்கியுள்ளது.

இதனால் இதுவரை தோழிகளாக இருந்து வந்த நிலையிலும், ஒருவருக்கு செல்லும் படவாய்ப்பினை, 'அவரை விட கம்மியான சம்பளத்தில் நடித்து தருவதாக' கூறி ஒருவருக்கொருவர் குடுமி பிடி சண்டையிட்டு வருகின்றனர்.  
Disqus Comments
'