Tuesday, 30 July 2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் திருநங்கை..! சமீபத்தில் வெளியான சுவாரஸ்ய தகவல்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக திருநங்கை இடம்பெற்று இருக்கும் தகவல் அந்நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ், தெலுங்கில் மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது.

நடிகை சமந்தாவின் மாமனார் நாகார்ச்சுனா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், 2010ம் ஆண்டு திருநங்கைகள் அழகி போட்டியை வென்ற தமன்னா சிம்ஹட்ரி வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்து இருக்கிறார்.

கடந்த ஜுலை 21ம் தேதி முதல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், நடிகை ஹேமா முதல்வாரத்தில் வெளியேற்றப்பட்டதை அடுத்து தமன்னாவின் வருகை மேலும் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. 


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();