தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்தின் வளர்ச்சி குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் பேசி இருக்கிறார்.
இயக்குனர் மணி ரத்னம் அவர்களின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அஜித்துடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில், அஜித் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், 'அஜித் மிகவும் பணிவான ஆச்சர்யத்தக்க நடிகர்.
அவருக்கு இன்று கிடைத்திருக்கும் பெயர், புகழுக்கு முழுக்க முழுக்க தகுதியானவர். மீண்டும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் எனது பாராட்டுகளை தெரிவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' என நெகிழ்ந்து பேசி இருந்தார்.
Social Plugin