இந்தியா-பங்களாதேஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், 87 வயதான இந்திய ரசிகை ஒருவர் ஒட்டுமொத்த அரங்கத்தின் கவனத்தையும் ஈர்த்தார்.
இங்கிலாந்தின் எட்க்பாஸ்டன் பகுதியில், நேற்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் 7 வது முறையாக இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இது ஒருபுறம் இருக்க, நேற்றைய போட்டியில் கலந்து கொண்டு இந்திய அணிக்கு ஆதரவு அளித்த, 87 வயதான 'சாருலதா பட்டேல்' என்ற ரசிகையும் நேற்றைய ஆட்டத்தின் ஹைலைட் ஆனார்.
இந்த வயதிலும் இளம் ரசிகையை போல, இந்திய அணி குவிக்கும் ஒவ்வொரு ரன்னையும் ஆரவாரத்தோடு கொண்டாடினார். இவரது உற்சாகத்தை கண்டு வருணனையாளர்கள், ரசிகர்கள் ஏன் இந்திய அணி வீரர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
போட்டியின் முடிவில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தொடக்க ஆட்ட காரர் ரோஹித் சர்மா ஆகியோர், அந்த 87 வயது இளம் ரசிகையை சந்தித்து கௌரவிக்கும் விதத்தில் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றும் அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தினர்.
How amazing is this?!— Cricket World Cup (@cricketworldcup) July 2, 2019
India's top-order superstars @imVkohli and @ImRo45 each shared a special moment with one of the India fans at Edgbaston.#CWC19 | #BANvIND pic.twitter.com/3EjpQBdXnX
Social Plugin