Monday, 24 June 2019

நடிகர் சங்க தேர்தல்: மீடியாக்களை பார்த்து நறுக்கென கேள்வி கேட்ட விவேக்..! குவியும் பாராட்டுக்கள்


நடிகர் சங்க தேர்தல் நேற்று பரபரபபாக நடைபெற்று முடிந்த நிலையில், தலைபோகும் விஷயமாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்த மீடியாக்களை பார்த்து விவேக் கேட்ட கேள்வி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குடிநீர் பிரச்சனை, ஊழல் என ஒட்டுமொத்த தமிழகமே திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், தலைபோகும் விஷயமாக நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்தன தமிழக மீடியாக்கள்.

ஓட்டு போட வந்த பிரபலங்கள் பார்த்து, தங்கள் கேள்வி கணைகளை வீச குவிந்திருந்த செய்தியாளர்களை நடிகர் விவேக் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்,

'இந்த தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. ஆனால் வெறும் 3000 பேர் சம்பந்தப்பட்ட இந்த தேர்தலை விட நிறைய முக்கியமான விஷயங்கள் தமிழகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்சனையை போக்க, மக்களே இறங்கி பல இடங்களில் நீர் நிலைகளை தூர்வாரி வருகின்றனர். அவர்கள் தான் ஒளிபரப்பட வேண்டியவர்களே ஒழிய இந்த தேர்தல் அல்ல' என பேச கூடியிருந்த செய்தியாளர்கள் நெளிவதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
Disqus Comments
'