Breaking News

தன்னை தோற்கடித்த அஜித்தின் படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!!!


சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'விஸ்வாசம்'. பொங்கலுக்கு வெளியாகி இருந்த திரைப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், பெரிய அளவில் பேசப்படும் திரைப்படங்களை தவறாது பார்த்து விடும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் தனது பேட்ட திரைப்படத்திற்கு டஃப் கொடுத்த விஸ்வாசம் திரைப்படத்தை சமீபத்தில் கண்டு கழித்திருக்கிறார்.

அப்படி காணும் திரைப்படம் தன்னை கவர்ந்து விட்டால், படக்குழுவினரை அழைத்து பாராட்டும் பழக்கமுடைய அவர், விஸ்வாசம் இயக்குனர் சிவா அவர்களை அழைத்து பாராட்டி இருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது, சூப்பர் ஸ்டாருக்காக தான் செதுக்கி வைத்திருந்த கதையை சிவா கூறியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதனால் சிவாவின் இயக்கத்திலும் சூப்பர் ஸ்டார் நடிக்கலாம் என திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.