Ad Code

Responsive Advertisement

அத்தனையும் செட்டப்பு தான்..! விஜயகாந்த் 'சொத்து' ஏலம் குறித்து வெடித்த சர்ச்சை


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய 5 கோடி ரூபாய் கடனுக்காக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நடிகர் விஜயகாந்தின் சொத்து ஏலம் விடப்பட இருப்பதாக வெளியான தகவலில் இருக்கும் தில்லு முல்லுகள் குறித்து பலரும் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.

ஒரு கட்சி தலைவராக அதுவும், ஆளும் கட்சியான அதிமுக வுடன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க பல நூறு கோடிகள் பெற்றதாக கூறப்படும் நிலையில், வெறும் 5 கோடிக்கு இவ்வளவு அக்கப்போறா? என நகைக்கின்றனர் விவரம் தெரிந்த பொதுமக்கள்.

அப்படியே விஜயகாந்த் ஏழ்மையில் இருப்பதாகவே வைத்து கொண்டாலும், 'அவரது ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு சொந்தமான பகுதி நிலங்களை விற்றாலே, அந்த 5 கோடி சொற்ப கடனை கட்டிவிடலாமே' எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும் நடிகர் விஜயகாந்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், காலகாமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்களாக பல கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் செய்த, விஜயகாந்த் குடும்பத்தின் மீது வெறும் 5 கோடி ரூபாய்க்காக நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

சொல்லப்போனால் விஜயகாந்த் சொத்து ஏலம் நடைபெற கூட வாய்ப்பு இல்லை. அவர்கள் செலுத்த வேண்டிய தொகையின் வட்டியை காட்டினாலே ஏலம் நிறுத்தி வைக்கப்படும் என்பதும் பலர் அறிந்த உண்மை.

இப்படி இருக்க, விஜயகாந்த் தரப்பில் இருந்து இப்படியொரு வேலை செய்யப்பட்டு இருப்பது, மக்களிடம் அவர் மீதான அனுதாபத்தை தக்க வைத்து கொள்ள தான் என்கிறது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்கள்.