தமிழ் திரைப்பட நடிகரும், பிரபல அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்களின் சொத்துக்கள் வங்கி ஒன்றினால் ஏலத்திற்கு விட இருக்கும் தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிரபல நாளிதழ் ஒன்றில் இன்று இந்தியன் ஓவர்சீஸ் வாங்கி வெளியிட்ட அசையா சொத்து ஏல விபரத்தில், நடிகர் விஜயகாந்தின் சாலிகிராம வீடு மற்றும் மாமண்டூரில் அமைந்துள்ள அவரது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலம் விட இருக்கும் தகவல் இடம் பெற்று இருந்தது.
குறிப்பிட்ட வங்கியிடம் நடிகர் விஜயகாந்திற்கு சுமார் 5.52 கோடி கடன் பாக்கி உள்ள நிலையில், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அவர் குறிப்பிட்ட தொகையை திரும்பி செலுத்த தவறியதால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், ஒரு மாபெரும் நடிகரும், பலருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்தவருமான நடிகருக்கே இந்த நிலையா என அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.
Social Plugin