Thursday, 20 June 2019

நேசமணியை காலி செய்யணும்..! களத்தில் இறங்கி வேற லெவல் காட்டும் விஜய் ரசிகர்கள்..!


நடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் வேளையில், இதுவரை எவரும் செய்திடாத அளவிற்கு கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

ஏற்கனவே விஜய் பிறந்தநாள் சிறப்பு புகைப்படம், தளபதி 63 பர்ஸ்ட் லுக் என சமூக வலைத்தளங்கள் விஜய் ரசிகர்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் விஜயின் பிறந்த நாள் தினத்தன்று, ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்கும் அளவிற்கு ட்ரெண்ட் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.

முன்னதாக நடிகர் வடிவேலுவின் நேசமணி கதாப்பாத்திரம் சமூக வலைத்தளங்களில் உலக அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் அந்த கதாபாத்திரம் பேசப்பட்டதை விட விஜய் பிறந்தநாள் பற்றிஅதிகம் பேசபட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட துவங்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.   
Disqus Comments
'