நடிப்பை தாண்டி தனக்குள் இருக்கும் மற்றொரு திறமையை வெளிக்காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜாக்குலின்.
கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் ஜாக்குலின். தற்பொழுது திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், கடைசியாக கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் சகோதரியாக நடித்து அசத்தி இருந்தார்.
இந்நிலையில், நடிப்பை தாண்டி ஓவியத்திலும் தனக்கு ஆர்வம் இருப்பதாக தெரிவித்திருந்த அவர், ரசிகர்களுக்காக தான் வரைந்த ஓவியம் ஒன்றினையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
Art by me— Jacquline Fernandas (@jacquline_vj) June 11, 2019
How is it pic.twitter.com/ryJUVkIqb4
தேர்ந்த ஓவியர் வரைந்ததை போல மிக நேர்த்தியாக அந்த ஓவியம் உருவாகி இருந்த நிலையில், ரசிகர்கள் பலர் அவரது இந்த திறமையை பாராட்டி வருகின்றனர்.
Social Plugin