நடிகர் விஜயின் ரசிகர்களை பாஜக கட்சி பிரமுகரான S.V.சேகர் புகழ்ந்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் விஜயையும், பாஜக அரசியல் கட்சியையும் நினைத்தால், 'சும்மாவே அவிங்களுக்கும் நம்மளுக்கும் வாய்க்கா தகராறு', எனும் காமெடி வசனம் தான் நினைவுக்கு வரும்.
அந்த அளவிற்கு அக்கட்சியை நடிகர் விஜய் தனது படங்களில் விமர்சிப்பதும், பதிலுக்கு பாஜகவினர் பட ரிலீஸின் போது பிரச்சனை செய்வதும் என பல கசப்பான அனுபவங்களை இரு தரப்பும் எதிர்கொண்டு உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி விஜய் ரசிகர்கள், மதுரை உள்ளிட்ட சில இடங்களில் 'விலை இல்லா விருந்தகம்' எனும் பெயரில் தினமும் 150 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவளித்து வருகின்றனர்.
சுமார் 1 வருட காலம் நடைபெற இருக்கும் இந்த நல்ல விஷயம் குறித்து கேள்விப்பட்ட S.V சேகர், நடிகர் விஜயின் தரப்புக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார்.
மிகச்சிறந்த விஷயம். தானத்தில் சிறந்தது அன்னதானம். வாழ்த்துக்கள். Our Blessings to VIJAI. 🙏🙏🇮🇳🇮🇳🙏🙏 https://t.co/huoShoucTe— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) June 25, 2019
Social Plugin