நடிகர் விஜயின் மகனான சஞ்சயின் சமீத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், பெரும்பாலான நடிகர்களை போலவே தனது மகன் சஞ்சய்யையும் நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார்.
மகனின் சினிமா ஆர்வத்தை அறிந்தே விஜய் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இந்நிலையில் கனடாவில் திரைத்துறை சம்பந்தமான கல்லூரி படிப்பை பயின்று வரும் சஞ்சய், நிகழ்ச்சி தொகுப்பாளர், குறும்பட இயக்குனர், நடிகர் என அடிமட்டத்தில் இருந்து அனைத்தையும் முறைப்படி பயின்று வருகிறார்.
ஏற்கனவே இவர் ஒரு குறும்படம் நடித்து வெளியாகி இருந்த நிலையில், மீண்டுமொரு குறும்பட தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருந்த நிலையில், அவரது சமீபத்திய தோற்றம் கண்டு, அப்பாவை விட ஸ்டைலாகி விட்டீர்களிலே என் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Social Plugin