நடிகர் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்திலேயே ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு பார்ப்பப்பை கிளப்பி வருகின்றனர்.
ரஜினி, கமல் ஆகியோரை அடுத்து நடிகர் விஜயும் அரசியலில் அடியெடுத்து வைக்க இருக்கும் தகவல் ஊர் அறிந்த ஒன்று. வருகிற சட்டமன்ற தேர்தலை விட்டுவிட்டு, அடுத்த தேர்தலை குறிவைத்து களமிறங்க இருக்கிறார் தளபதி விஜய்.
இதற்கான ஏற்பாடுகள் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக ரகசியமாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களோ விஜயின் பிறந்த நாள் சிறப்பு புகைப்படம் முதல், ஒட்டும் போஸ்டர் வரை அவரது அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பை எகிற செய்யும் படி, படுபயங்கரமாக பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு நீங்க தான் சரியான #செலக்சன்— Chillax Praveen (@Vj_Praveen31) June 20, 2019
உங்களுக்காக காத்திருக்கிறது#எலெக்சன்
தமிழ்நாட்டை ஆளப்போகும் #தளபதியே வாழ்க பல்லாண்டு
Upm Anand அண்ணன் தரம்👌👌 pic.twitter.com/nFBSqfao6Q
இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நடிகர் விஜயின் செல்வாக்கை கண்டு, அரசியல் கட்சிகள் மிரண்டு போய் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
— Chillax Praveen (@Vj_Praveen31) June 20, 2019
Social Plugin