Friday, 21 June 2019

படம் தான் காப்பினா இதுவுமா..? விஜய் குறித்து எழுந்த புதிய சர்ச்சை


நடிகர் விஜயின் பிறந்த நாள் சிறப்பு புகைப்படம் எங்கிருந்து சுடப்பட்டது என்பதை அறிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கின்றனர் ஒரு தரப்பினர்.

பெரும்பாலான முன்னணி நடிகர்களை போலவே நடிகர் விஜயின் பிறந்தநாளும் சமூக வலைத்தளங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரது பிறந்தநாள் தினத்தன்று ஒட்டுமொத்த ரசிகர்களும் விஜயின் ஒரே புகைப்படத்தினை டிபி ஆக வைத்து, சமூக வலைத்தளங்கள் முழுவதும் விஜய் மயமாக்குவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

அப்படி இந்த வருட ஸ்பெஷலாக ரசிகர்கள் வெளியிட்டிருந்த புகைப்படம் பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தது. ஆனால் உண்மையிலேயே இது கூடைப்பந்தாட்ட போட்டி ஒன்றிற்காக உருவாக்கப்பட்ட புகைப்படத்தின் காப்பி என்பதை அறிந்து நெட்டிசன்கள் பலர், விஜய் 63 படம்தான் காப்பின்னு பாத்தா, காமன் டிபியை கூட காப்பி அடித்து வைத்திருக்கிறீர்களே என கிண்டல் செய்து வருகின்றனர்.    

Disqus Comments
'