Ad Code

Responsive Advertisement

மீண்டும் வருகிறது 'விடாது கருப்பு' (மர்மதேசம்)..! கொண்டாட தயாராகுங்கள் 90s கிட்ஸ்களே


என்னதான் இப்பொழுது அமேசான், நெட்ப்ளிஸ் என வெப்சீரிஸ்கள் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும், இன்டர்நெட் என்ற ஒன்று இல்லாத சமயத்திலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிவி முன் அமர செய்த தொடர் 'மர்மதேசம்'.

இன்று பல கோடி ரூபாய் செலவில் , திகில் திரைப்படங்கள் என்று சொல்லிக்கொண்டு வெளிவரும் திரைப்படங்களை பார்த்து குழந்தைகள் சிரித்து கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் அதிகம் வளராத 90 களிலேயே உருவாகி பார்ப்பவர்களை நடுநடுங்க வைத்த தொடர்களில் இந்த மர்மதேசமும் அடக்கம்.

இதனை மீண்டும் ஒளிபரப்ப கோரி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு  அதன் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா, அத்தொடரை யூட்யூபில் தினம் தினம் ஒளிபரப்ப இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.