90 களில், கவர்ச்சி குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர் விசித்திரா. இப்படி கவர்ச்சியின் மூலம் பலர் மத்தியில் பிரபலமான இவர், கடந்த 2010ம் ஆண்டு முதல், நடிப்பதை நிறுத்தி குடும்பத்துடன் புனேவில் செட்டில் ஆகிவிட்டார்.
தன் தந்தையின் மறைவுக்கு பின் இந்த முடிவை எடுத்த விசித்திரா தற்பொழுது மீண்டும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள இருப்பதாக பரவிய வதந்தியை தொடர்ந்து, பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், தனது தற்போதையை நிலை பற்றிய பல தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும் 'இப்பொழுது நான் ஒரு குடும்ப பெண். அதனால் பழைய விசித்ராவை மனதில் வைத்து கவர்ச்சி வேடங்களில் நடிக்க அழைக்காதீர்கள். கவர்ச்சி இல்லாத நல்ல குணச்சித்திர வேடங்களில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்' எனவும் அதில் வேண்டுகோள் விடுத்தது இருந்தார்.
Social Plugin