தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் மாபெரும் வெற்றி படங்களில் வீரம் திரைப்படமும் ஒன்று. கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனம் ஏதும் இன்றி குடும்பங்களை கவரும் ஒன்றாக இத்திரைப்படம் உருவாகி, குடும்ப ரசிகர்களிடையே அஜித்திற்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
இப்படி நடிகர் அஜித்திற்கு சிறப்பான திரைப்படமாக அமைந்த வீரம், ஹிந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. விக்கி கௌஷல் நடிக்க இருக்கும் இத்திரைப்படத்தின் பெயர் தான் தற்பொழுது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ரீமேக் திரைப்படதிற்கு, LOL (Land Of Lungies) லேண்ட் ஆப் லுங்கிஸ் என பெயரிட அப்படக்குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் வேஷ்டியை கிண்டல் செய்யும் படி இந்த தலைப்பு அமைந்திருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
Social Plugin