Thursday, 20 June 2019

பல பெண்களிடம் செருப்படி வாங்கியவன் அவன்..! வடிவேலுவை வறுத்தெடுத்த சிங்கமுத்து


காமெடி நடிகர் வடிவேலுவை, நடிகர் சிங்கமுத்து சகட்டு மேனிக்கு விமர்சித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

காமெடி நடிகர் வடிவேலு, அரசியல் 24ம் புலிகேசி பட பஞ்சாயத்து என சினிமா வாய்ப்புகளை இழந்து நிற்கிறார். இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ரசிகர்களுக்கு விளக்கம் அளித்த அவர், ஷங்கர் மற்றும் சிம்பு தேவன் ஆகியோரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார்.


இது குறித்து வடிவேலுவுடன் பல படங்களில் பணியாற்றிய சிங்கமுத்து நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். அதில், நடிகர் வடிவேலு என்னமோ தான் தான் காமெடியின் உச்சம் என நினைத்து கொண்டிருக்கிறார்.

அவன், தன்னால் பேசமுடியாது, தனக்கு நடிக்க வராத காட்சிகளை தனக்கு ஏற்றார் பல மாற்றியமைத்து கொள்வதை மட்டுமே செய்வான். அந்த காட்சி ஹிட் ஆகிவிட்டால் என்னமோ தன்னால்தான் ஹிட் ஆனதாக சொல்லிக்கொள்வான்.

இயக்குனரோ அல்லது காமெடி எழுதி கொடுப்பவருக்கோ அந்த  பெருமை செல்லாது. இப்படி பல இயக்குனர்களை இவன் கொடுமை செய்திருக்கிறான். பல மேனேஜர்கள் இவனால் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று இருக்கின்றனர்.

வெளியே தன்னை பெரிதாக சொல்லிக்கொள்ளும் அவன், பல பெண்களிடம் செருப்படி வாங்கிய கதை எனக்கும் மட்டும்தான் தெரியும்' என சகட்டு மேனிக்கு விமர்சித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
Disqus Comments
'