'பிரே பார் நேசமணி' என ஒட்டுமொத்த உலகமே தன்னை கூகுளில் தேடி கொண்டிருக்க, தனக்கு கிடைத்த இந்த பப்ளிசிட்டியை கொண்டாட கூட முடியாத துக்கத்தில் இருக்கிறார் நடிகர் வடிவேலு.
ஒரே ஒரு சுத்தியல் குறித்த கேள்விக்கு, காண்டிராக்டர் நேசமணி, அப்பரசண்டிகள், பிச்சுமணி என பிரண்ட்ஸ் பட பூர்விகத்தை குறும்புக்கார நெட்டிசன் ஒருவர் கூறப்போய், உலக அளவில் ட்ரெண்ட் ஆனார் நேசமணி.
ஆனால் நிஜ உலகை தாண்டி இப்படியொரு, இணைய உலகு இருப்பதை அறியாதவராய், பத்திரிக்கையாளர் ஒருவரிடம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என கேட்டு தெரிந்து கொண்டார் வடிவேலு.
அது மட்டுமல்லாது, உலகமே தன்னை பற்றி பேசி மகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருக்கும் சமயத்தில், தனது மனைவியின் அன்னை இறந்து விட்ட துக்கத்தில் இருக்கும் தகவலை தெரிவித்து இருப்பது நேசமணி ரசிகர்களை கண்கலங்கவும் வைத்துள்ளது.
Social Plugin