Saturday, 22 June 2019

சொன்னது போலவே தேடி வந்த ஹாலிவுட் வாய்ப்பு..! கெத்து காட்டும் வடிவேலு


தமிழ் திரையுலகில் ஏகப்பட்ட விமர்சனங்களில் சிக்கி நடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வடிவேலு, தான் நினைத்தால் ஹாலிவுட்டிலேயே நடிப்பேன் என சமீபத்திய நேர்காணலில் பேசி இருந்தார்.

இந்நிலையில் அவர் சொன்னது போலவே வடிவேலுவின் வீடு தேடி வந்திருக்கிறது, பன்னாட்டு நிறுவனங்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு.

தியேட்டரில் படம் பார்ப்பது எனும் பாரம்பரிய சினிமாவின் அடுத்தகட்டமாக, அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் வீடியோ ஒளிபரப்பு தளங்களை நோக்கி இளசுகள் நகர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

திரையுலகை காட்டிலும் தரமான படைப்புகள் இந்த தளங்களில் நாளுக்கு நாள் வெளியாகி வருகிறது. நடிகர் வடிவேலுவும் பேட்டி ஒன்றில் நெட்ப்ளிக்ஸில் நடிக்க இருப்பதாக வாய்விட, இதுதான் வாய்ப்பு என குறிப்பிட்ட தளம் அவரை சந்தித்து முழு நீள காமெடி வெப்சீரிஸில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில் வடிவேலுவின் முடிவு குறித்து, விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    
Disqus Comments
'